கனவின் இசை.

739

கும் இருட்டில்-நீளும்
இரவுகளின் காவலில்
அருந்ததிகளின்
ஆசீா்வதிப்புக்களுடன்
மெல்ல அசைகிறது -இசை

சாளரங்கள் மூடப்பட்ட-பின்னும்
முற்றுப்பெறமறுத்து
கனவுகளில் வழிந்தோடும்
நீா்ச் சொரியலாய்-என்னுள்
புகுந்து தாவுகின்றது
கனவின் இசை
நான்
தேடும்என்னவனாய்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவனுக்கு தெரியுமோ
என்னமோ?இசைக்குத்
தெரியும் வெற்றிடமான -என்
இதயத்தில் கனவைநிரப்புவது
எப்படியென்று..

தொலை தூரம் நான்
கானும்என்னவனின்
சிரிப்பொழியை மென்றுவந்து-
இரைமீட்டு செல்கின்றது
என் கனவில் தினமும் -இசை



தகிக்கும் முத்தங்களின்
நினைவுகளின்
வெப்பக் கனதி
படுக்கையை நனைக்க…
இரவுக் குளிரின்
இதங்களைப்பறித்து-
வெப்பம்தணித்து
சென்றதுகாற்றாகி என்
கனவின்இசை…

என் மௌனங்களை உடைத்த
அவன்வெற்றுப் பார்வையை சத்தமற்றஒலிக்கசிவாக்கி…
..இசைக்கத்தொடங்கியது
இதமாக…

பரந்து கிடந்த என் உணா்வுகளை
நொருங்கி சிதைந்தஎன் கனவுகளை
இசையின் வயிற்றில்உருவாகி அழகிய பாடலென்றுவைகறையில்பிறக்கின்றது…

..அதேவிடியலிலே
நரம்பறுந்த வீணையின்
இசையாகி சுருதியில் பேதமடைகின்றது
என் கனவின் இசையெல்லாம்

மித்யா -கானவி.