திருமண தடை போக்கும் விரதம்

662

கார்த்திகை பெண்கள் 6 பேர் தான் 6 குழந்தையாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்தார்கள். அந்த 6 பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்கு `கார்த்திகேயன்’ என்ற பெயரும் உண்டு. மேலும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய விரத நாளாக கருதப்படுகிறது.

birthofmuruga_21783

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதிலும், கார்த்திகை விரதம் தொடங்க விசேஷ நாளாகும். அதனால், திருக்கார்த்திகை தீபம் அன்று முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள எல்லாக் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அவ்வாறு முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.