அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் படகை காணவில்லை!

557

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது.

இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர்.

இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது.

தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.