கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகச் சிறிய கார்(படங்கள்)!!

623

உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர் அதை சாலையில் ஓட்டிச் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த, அஸ்டின் கால்சன் கார் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வித்தியாசமான பல கார்களை வடிவமைத்துள்ள இவர் ஏதேனும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆவலில் சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன் பலனாக 25 அங்குல உயரமும் நான்கு அடி நீளமும் உடைய சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார். மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு சில முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டன.

இதன்படி பாதுகாப்பு கண்ணாடி, ஒலிப்பான், மற்றும் சீட் பெல்ட் போன்றவை சேர்க்கப்பட்டன. அதன் பின் சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தடையில்லா சான்றிதழையும் பெற்றார்.



அரசாங்க ஒப்புதலுடன் தான் வடிவமைத்துள்ள காரை சாலையில் ஓட்டிக் காண்பித்த கால்சன் தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளது.

car car2 car3 car4 car5