பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் விளக்கமறியலில்!!

515

பதுளையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றில் பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.மக்கள் நெரிசலுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணமான பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டமையால் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த சம்பவம் குறித்த பெண்ணின் கணவருடன் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அதன் பின்னர் குறித்த இளைஞர் தான் மருத்துவ மாணவர் என விவரித்துள்ள நிலையில், குறித்த பெண்ணின் கணவரையும் தாக்கியுள்ளார்.குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் ருவண்திக்கா மாரசிங்க உத்தரவிட்டுள்ள நிலையில், சந்தேக நபரான மருத்துவ மாணவர் ஹாலிஎல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பதுளை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக சார்ஜென்ட் ரத்நாயக்க சம்பவத்தை நீதிமன்றில் விளக்கியுள்ளார்.பதுளை மைதானத்தில் இடம்பெற்ற களியாட்டத்தில், மக்கள் நெரிசலுக்கு இடையில் சந்தேக நபர், பெண் ஒருவரின் பின் பகுதியை அழுத்தியுள்ளதாகவும், குறித்த பெண் இதனை தனது கணவரிடம் கூறியுள்ளார்.



கணவர் சந்தேகநபரிடம் விசாரிக்க சென்ற போது வாக்குவாதம் மோதலாக மாறியுள்ள நிலையில், சந்தேகநபர் கணவரை தாக்கியுள்ள நிலையில் அவர் தற்போது வரையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்”.. என பொலிஸ் சார்ஜென்ட் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.