இலங்கையர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார் பிரதமர்!!

681

இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஜனவரி 8ஆம் திகதியளவில் நாடளாவிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும், அதன்படி சுமார் இருபதாயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குளியாப்பிட்டியவில் வாகன உற்பத்திச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த 20,000 வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையில் நாம் திருப்திப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கவே நாம் விரும்புகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2020ஆம் ஆண்டு இலங்கை முழுதாக வறுமையிலிருந்து விடுபடும் நாடாக மாற்றமடையும் என்று பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்திருக்கும் நிலையில், இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் கொடுத்துள்ள இந்த செய்தி முதல்படியாக காணப்படுகின்றது.



அண்மையில் “இலங்கையில் இனி அடிப்படைச் சம்பளம் ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும்” என்று பிரதமர் தெரிவித்திருந்த கருத்து அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் ஆகும்.