சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் – 200 இலங்கையர்களுக்கு ஆபத்து?

774

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசியத்தை பாதுகாப்பதாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை இந்த மாதம் ஜனவரி 01ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதனால் வெளிவரும் பெயர் பட்டியலில் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை சுவிஸ் அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ளதாகவும், இது தொடர்பான உடன்படிக்கையில் அந்நாட்டு அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கையர்கள் 200 பேருடைய கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளதாக கடந்த வருடம் வெளியான பனாமா பத்திர தகவல்கள் மூலம் பகிரங்கமாக கூறியிருந்தது.எனினும் சம்பந்தப்பட்ட தகவல்களை சுவிஸ் அரசாங்கம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.