மரணிக்க தயாராக இருக்கிறேன் : 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு!!

538

O1

இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.
இவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.

இவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.



இந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.

தனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எனவே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.

நான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது. 24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது.

ஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.

இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.

அவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

தனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.

145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் “பொறுமை”.

O2