கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ளும் பெண் குழந்தைகள்!!

493

3464153658_cd50e6c517_b

நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டிலும் உள்ள சடங்குகளை இணைத்து செய்யும் இந்த சமூகத்தினர், இந்த திருமண விழாவை 2 நாட்கள் நடத்துகின்றனர்.அதாவது, இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளை அழிவே இல்லாத விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அந்த பெண் குழந்தைகள் காலம் முழுவதும் விதவையாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அந்த சமூக மக்களிடம் உள்ளது.

பெல் பழம் எனப்படும் பழத்தை அந்த பெண் குழந்தைகள் ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் விஷ்ணு சிலையை தொடுவதன் மூலம், திருமணம் நடப்பதாக கருதப்படுகிறது.இதையடுத்து திருமண விழாவை போலவே விருந்தினர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்.



காலம் காலமாக முன்னோர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றிவருவதால் நாங்களும் இதனை தவறாமல் செய்து வருகிறோம் என பெண் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.