உலகின் குள்ளமான பெண்ணாக 22 வயது கல்லூரி மாணவி..!!

624

smallest woman

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜோர்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால் பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்சில் உள்ள கஸ்கசியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நடனம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்குகள். பிராட், கராத்தே, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, மஜிக் என்று பல விடயங்களில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். 28.5 அங்குல உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன்தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமான பெண்ணாகத் திகழ்ந்தார். அவரை முந்திவிட்டார் பிரிட்ஜெட்.

பூமியில் பிறந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்டர்ஸ்தான். அவரது உயரம் 24 அங்குலம். அவர் கடந்த 1895ம் ஆண்டு தனது 19ஆவது வயதில் நிமோனியாவால் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.