மனைவிக்கு விலை அறிவித்த கணவன்: பேஸ்புக்கில் நூதன பதிவு!!

436

1 (70)

பேஸ்புக்கில் தனது மனைவியை விற்க முன்வந்த கணவர் மீது மனைவி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த திலிப் என்பவர் வாங்கிய கடனை திருப்பி அளிக்க எடுத்த நூதன முடிவு பொலிஸ் வழக்கில் முடிந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

திலிப் வாங்கிய கடனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் மனைவி மற்றும் 2 வயது மகள் புகைப்படத்தையும் இணைத்து பதிவு செய்த திலிப்,கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி அளிக்க இருப்பதால், தமது மனைவியை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஆர்வம் உள்ள நபர்கள் தமது கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.இதனை தனது உறவினர் மூலம் அறிந்த அந்தப் பெண், தனது கணவர் திலிப் மாலி மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.



புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.கடனை திருப்பி அளிக்க மனைவியை விற்க கணவன் முன்வந்த சம்பவம் இந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.