மனைவியுடன் பிரச்சனை விமானத்தை மோதவிட்டு பயணிகளை கொல்வேன் – மிரட்டிய விமானி!!

567

pilot-plane-cockpit-070316-640x457

மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதால், விமானத்தை மோதவிட்டு பயணிகள் அனைவரையும் கொல்வேன் என்று விமானி ஒருவர் பயமுறுத்திய விவகாரம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட ஒரு பயணிகள் விமானம் தயாராக இருந்தது. மொத்தம் 200 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்நிலையில், அந்த விமானத்தை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விமானியின் செல்போனில் இருந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு தகவல் வந்தது.அதில் “எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக கூறிவிட்டாள். நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறேன். விமானத்தை எங்கேயாவது மோத செய்து, நானும் இறந்து போவேன்” என்று கூறியிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை புறப்படவிடாமல் தடுத்தனர். மேலும், தற்கொலை மிரட்டல் விடுத்த விமானியை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். மற்றொரு சக விமானியை விமானத்தை இயக்கு அனுமதித்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.இந்த விமானியிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.