அரை நிர்வாண உடலில் உணவு : விசித்திர சாதனை!!(படங்கள்)

701

 
கின்னஸ் சாதனை நிகழ்த்த பலர் சாகசங்களையும், வினோதங்களையும் செய்கின்றனர். ஆனால் ஒரு பெண் நண்பர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க புதுவிதமான நிகழ்ச்சியை நடத்தினார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மோனிகா ரோஸ்ட் வோல்டு (23). இவர் நண்பர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதற்காக உடலில் இருந்து தனது ஆடைகளை அகற்றி விட்டு அரை நிர்வாணமாக ஒரு மேசையில் படுத்தார். பின்னர் தனது உடல் முழுவதும் பேப்பர் நாப்கிளை விரித்தார். அதன் மீது துரித உணவு பொருட்களை பரப்பி வைத்தார். தன் உடலின் மீது வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடலாம் என அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் சாப்பாடு கூடத்தில் நடந்தது. இதை அறிந்ததும் ஏராளமானவர்கள் கூடினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அவர்கள் மோனிகா ரோஸ்ட் வேல்ட் உடலின் மீது வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு ருசித்தனர்.



வினோத நிகழ்ச்சி 20 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. பின்னர் அது குறித்து தெரிவித்த மோனிகா, இது ஒரு கலை என்றார். மேலும் தனது நண்பர்களை கவருவதற்கு மட்டுமின்றி கல்லூரிகளில் இக்கலையை பரப்புவதற்காகவும் இதை செய்ததாகவும் கூறினார்.

1 2