131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்டுபிடிப்பு!!

451

Joao-Coelho-de-Souza__3_

131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்ட றியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சமூக சேவை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். 3 பிள்ளைகளுக்குத் தந்தையான ஜோவோ கொயல்ஹோ டி சொய்ஸா என்ற மேற்படி நபர் தன்னை விடவும் 69 வயது இளமையான தனது மனைவியுடன் வாழ்ந்து வருவதாக அதிகாரிகள் கூறு கின்றனர். தற்போது உலகில் உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக ஜப்பானைச் சேர்ந்த 112 வயதான யஸுடரோ கொயிட் கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டுப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதேசமயம் உலகில் உயிர்வாழ்ந்தவர்களிலேயே நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவராக 1997 ஆம் ஆண்டில் தனது 122 ஆவது வயதில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியான ஜீன் கால்மென்ட் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜோவோ கொயல்ஹோ டி சொய்ஸாவின் பிறப்புச் சான்றிதழ் பதிவுகளின் பிரகாரம், அவர் 1884 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி பிறந்துள்ளதாக சமூக சேவை உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். அதனால் அவரை உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு பிரேசில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



ஜோவோ கொயல்ஹோ டி சொய்ஸா எஸ்ரிராரோ டு அல்கன்டரா பிராந்தியத்தில் தனது மனைவி, (62 வயது) மற்றும் பேத்தி (16 வயது) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இது தொடர்பில் ஜோவோவின் மகளான சிர்லீன் (30 வயது) விபரிக்கையில், அவரது பிறப்புச் சான்றிதழ் பதிவுகள் சரியானவை எனவும் தான் பிறக்கும் போது தனது தந்தையின் வயது 101 எனவும் தெரிவித்தார். ஜோவோவுக்கு 6 வருடங்களுக்கு முன்னர் பாரிசவாத பாதிப்பு ஏற்பட்டதாகவும் எனினும் அவர் தவறாது தினசரி 3 தடவைகள் உணவருந்தி வருவதாகவும் தெரிவித்த சிர்லீன், தனது தந்தை சோறு, மீன் மற்றும் இறைச்சி என்பவற்றை விரும்பி உண்பதாக கூறினார்.