அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகாமையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஹில்ஸ் பகுதியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த ஒரு பூனைக்குட்டியை தத்தெடுத்த ஒரு பிராணிகள் நலச்சங்கம் சக்கர நாற்காலியின் உதவியுடன் அந்த செல்லப்பூனையை நடமாட வைத்துள்ளது.
தற்போது அந்தப் பூனையை தத்தெடுக்க ஒரு குடும்பத்தையும், அது வசிக்க ஒரு வீட்டையும் ஏற்படுத்தி தரும் முயற்சியில் வேல்லி கேட்ஸ் நிறுவனத்தார் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.