அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கற்களை உணவாக உட்கொள்கிறார். நியூயோர்க்கில் வசிக்கும் சில்வியா எனும் இப்பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பம் தொடர்பான விவரணப்படம் ஒன்றுக்காக இவர் கற்களை உண்ணும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்திலும் வெளியாகியுள்ளது.
21 வயதான இந்த இக்கர்ப்பிணிப் பெண் கற்களை உட்கொள்வது நோய்களுக்கு வழிவகுக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், இதை தன்னால் நிறுத்த முடியாமல் உள்ளதாக இரு குழந்தைகளின் தாயான சில்வியா கூறுகிறார். “பெரும் பாலான கர்ப்பிணிப் பெண்கள் ஊறுகாய் போன்றவற்றை உட்கொள்வர்.
ஆனால், நான் கற்களை உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன். இதற்காக நான் வெட்கப் படுகின்றேன் ஆனால், இதை நிறுத்த முடிய வில்லை. சில கற்களை பார்த்தவுடன் எனது நாவில் உமிழ் நீர் ஊறுகிறது” என்கிறார் சில்வியா.