மோதிரம் சிறியதாக உள்ளதால் காதலனின் திருமண கோரிக்கையை நிராகரித்த காதலி!!

447

chinees_propose_003

சீனாவில் சிறிய வைர மோதிரத்தை கொடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய காதலனின் கோரிக்கைகை ஏற்றுக்கொள்ளாமல் காதலி சென்றுள்ளார்.சீனாவின் Chengdu நகரத்தில் வைத்து தனது காதலி மற்றும் பலபேர் முன்னிலையில், தனது நண்பர்களேடு சேர்ந்து சந்தோஷமாக பாட்டு பாடி நடனம் ஆடியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பின்னர், தனது காதலியிடம் சென்று என்னை திருமணம் செய்துகொள்ள எனக்கூறி, ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்தை கொடுத்துள்ளார்.அதன்பிறகு, மோதிர பெட்டிய திறந்து அதனுள் இருந்து சிறிய வடிவிலான வைர மோதிரத்தி நீட்டியுள்ளார், இதனைப்பார்த்த காதலி, தான் எதிர்பார்த்த அளவை விட மோதிரம் சிறிய அளவில் இருப்பதால் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார்.

இதனால் காதலன் அதிர்ச்சியோடு தனது காதலியை பார்க்கிறார், இதுகுறித்து காதலி தனது தோழியிடம் கூறியிருப்பது, எனக்கு 1 கேரட் அளவிலான வைர மோதிரம் தருவதாகத்தான் அவன் கூறியிருந்தான்.



ஆனால், எதிர்பார்த்ததைவிட மோதிரம் சிறிய அளவில் இருக்கிறது, அவன் மிகவும் கவனக்குறைவாக நடந்துகொண்டான் என்று கூறியுள்ளார்.தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.