செவ்வாய் கிரகத்தில் “மனித முகம்” பரபரப்பை ஏற்படுத்திய நாசாவின் புகைப்படம்!!

481

nasa_man_002.w540நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாறையில் தெரிந்த முகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

அங்குள்ள வளங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்வதற்காக நாசா பல்வேறு விண்கலங்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில் நாசாவின் விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த திங்களன்று அனுப்பியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

செவ்வாய் கிரகத்தில் உள்ள கன்செப்சியான் பள்ளம் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் பாறையில் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ள காட்சிகள் நன்றாக பதிவாகியுள்ளன. அதில் தெரியும் ஒரு முகம் பண்டைய காலத்தில் வாழ்ந்த அசீரியர்களின் கடவுளான நாபுவின் முகம் போன்று உள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் ஸ்காட் வாரிங் என்பவர் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ் வாழ்ந்துவந்தார்கள் என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி.



மேலும் ஆசிரியர்கள் அப்போது விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்று தங்களின் கடவுளின் முகத்தை செதுக்கியுள்ளனர் என்பதும் இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எனினும் நாசா விவகாரம் குறித்த உண்மையை மக்கள் அறிந்துகொள்வதை நாசா விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாசாவில் செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அஸ்வின் வசவதா என்பவர் இது குறித்து கூறியதாவது, வேற்றுகிரகவாசிகள் குறித்த எந்த விவரங்களையும் விஞ்ஞானிகள் சாதாரண மக்களிடம் இருந்து மறைக்கவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனினும் செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் கடவுள்களின் உருவங்கள் தெரிவதாக புதிதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மலைகளில் புத்தரின் சிலை செதுக்கப்பட்டிருந்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.