இறந்துபோன பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்! அதிர்ச்சியில் உறைந்த பேத்தி!!

673

dead_grandmother

பிரித்தானியாவில் இறந்த பாட்டியிடமிருந்து பேத்திக்கு குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வசித்த லெஸ்லி எமர்சன் (Lesley Emerson Age-59) என்கிற பெண் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது அவருடன், அவர் பயன்படுத்திய கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் அவருடைய பேத்தி ஷெர்ரி (Sheri Emerson Age- 21), தனது பாட்டி இறந்து போனதை மறந்து, வழக்கம் போல நல்ல செய்திகளை தனது பாட்டியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தாள். இதேபோல் அவள் அனுப்பிய செய்திக்கு கடந்த வாரம் திடீரென உன்னுடைய செய்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என பதில் வந்துள்ளது.

மேலும் உன்னுடைய செய்தியை படித்ததில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, உன்னுடைய முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பேத்தி தனது மாமாவிடம் இவ்விடயத்தை கூறியதையடுத்து துப்பறியும் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



பாட்டி பயன்படுத்திய கைப்பேசி எண்ணை அந்நிறுவனம் துண்டிக்காமல், மற்றொருவருக்கு கொடுத்துவிட்டது என்றும் வந்த செய்தியைப் பார்த்ததும் குறும்பு வாலிபர் பதிலளித்ததுள்ளார் எனவும் துப்பறியும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனமும் அந்த குறும்பு வாலிபரும் நேற்று பாட்டியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர்.