பந்தயம் கட்டி நிர்வாண ஓட்டம் ஓடிய வாலிபர்கள்!!

575

Naked Raceபாய்ஸ் சினிமா பட பாணியில் ரூபா 20 ஆயிரம் பந்தயம் கட்டி, பாகிஸ்தானில் நிர்வாண ஓட்டப் பந்தயம் நடத்திய வாலிபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாலிபர்கள் சிலர், Boys பட பாணியில் நிர்வாண ஓட்டப் பந்தயம் நடத்த போவதாக தகவல் பரவியது. இதையடுத்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அவர்களை வேடிக்கை பார்க்க திரண்டனர். லாகூரில் இருந்து சுமார் 120 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரத் மாவட்டத்தில் இருக்கும் கோரலி என்ற கிராமத்தில் இருந்து நட் என்ற கிராமம் வரை ஓட வாலிபர்கள் திட்டமிட்டிருந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதனால் கோரலி மற்றும் நட் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராம தலைவர்கள் சிலர் உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். பொது இடத்தில் ஆபாசமாக நடக்க முயற்சிக்கும் வாலிபர்களை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், கோரலி அருகே சோதனை சாவடி அமைத்து அவ்வழியாக வரும் வாலிபர்களை தடுத்தி நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில் ஆரிப், மஸ்கீன், அர்ஷாத், வாகீர், இஷான், அபீத் ஆகிய 6 வாலிபர்களை மடக்கினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது பந்தய பணம் ரூ.20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அதன்பின், பொலிஸார் வழக்கமான முறையில் நடத்திய விசாரணையில், நிர்வாண ஓட்ட பந்தயம் நடத்த வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 6 வாலிபர்களையும் பொலிஸார் கைது செய்தனர். வேடிக்கை பார்க்க வந்திருந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.