பச்சோந்தியை போன்று உலகை பார்க்க உதவும் தலைக்கவச உபகரணம்!!

539

helmet

பச்­சோந்­தி­க­ளா­னது இடத்­திற்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றிக் கொள்­வ­துடன் ஒரே­ச­ம­யத்தில் பல திசை­க­ளிலும் பார்க்கக் கூடிய கண்­களைக் கொண்­டுள்­ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்­நி­லையில் பச்­சோந்தி போன்று உலகை ஒரே­ ச­ம­யத்தில் பல திசை­களில் பார்க்க உதவும் தலைக்­க­வச உப­க­ர­ண­மொன்றை லண்டன் பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரியைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

‘பொலிஐஸ் 2.0’ என அழைக்­கப்­படும் மேற்­படி உப­க­ர­ண­மா­னது கணி­னி­யொன்­றுடன் இணைப்பைக் கொண்ட புகைப்­ப­டக்­க­ரு­வி­க­ளையும் காட்சிப் புலத்தை பிர­தி­ப­லிக்கக் கூடிய திரை­யையும் கொண்­ட­மைந்­துள்­ளது. இந்த அக­ல­மான தலைக்­க­வசம் சுத்­தி­யல்­ தலை சுறா­மீனின் தலை­யை­யொத்த வடி­வ­மைப்பில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உபகரணத்திலான தொழில்நுட்பம் பயன்பாட்டாளருக்கு 180 பாகை கோணத்தில் பார்வைப் புலத்தை வழங்குகிறது.