ஓவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகன்!!

511

kidney1சமை­ய­லறை ஒவன் உப­க­ர­ணத்தை சுத்­தி­க­ரிப்­ப­தற்­கான இர­சா­யன திர­வத்தை அருந்­திய பால­க­னொ­ரு­வனின் உடல் உள் உறுப்­புகள் கடு­மை­யான எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­ன­துடன் அவ­னது சிறு­நீ­ர­கங்­களும் செய­லி­ழப்­புக்கு உள்­ளா­கிய விப­ரீத சம்­பவம் பிரித்­தா­னிய பிர்­மிங்­ஹாமில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் பிரித்­தா­னிய ஊட­கங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. எலியஹ் மோலி என்ற மேற்­படி பால­கனின் (ஒரு வயது) தந்­தை­யான ஜிம்மி ஒவன் உப­க­ர­ணத்தை சுத்­தி­க­ரித்துக் கொண்­டி­ருந்த போது, அங்கு தவழ்ந்து வந்த பாலகன் மேற்­படி சுத்­தி­க­ரிப்பு இர­சா­யன திர­வத்தை அருந்­தி­யுள்ளான்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக மோலி, பிர்­மிங்ஹாம் சிறு­வர்கள் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டான்.அங்கு அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்ட பால­க­னுக்கு அவ­னது சுவாசத் தொகு­தியில் ஏற்­பட்ட பாதிப்பை சீர்­செய்ய சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து பாலகன் தனது முத­லா­வது பிறந்­த­நாளை மருத்­து­வ­ம­னையில் கொண்­டாட நேர்ந்­துள்­ளது.வீட்டுப் பாவனை இர­சா­ய­னத்தை உரிய முறையில் கவ­ன­மாக கையாளத் தவறி தமது சின்­னஞ்­சிறு மக­னுக்கு தாம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதையிட்டு தாம் பெரிதும் துயரமும் குற்ற உணர்வும் அடைந்துள்ளதாக பாலகனின் பெற்றோரான ஜிம்மியும் டியனியும் தெரிவிக்கின்றனர்.