வீடு திரும்பினார் மனோரமா!

743

Manorama-back-singam2

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா.

70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.



இந்த நிலையில் உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமையன்று(மே 31) மனோரமாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை வீடு திரும்பினார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.