இடி- மின்னல் எச்சரிக்கை!

636

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம்- இடி- மின்னலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களை அறிவுறுத்துகின்றது.
இதேவேளை- புத்தளம் – யாழ்ப்பாணம் வரையிலான கடற் பிரதேசங்களிலும் காலி- ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற் பிரதேசங்களில் மழையுடன் கூடிய காற்று வீசும் எனவும் கடல் கொந்தளிப்பு காணப்படுமெனவும் வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறிப்பாக காலி – ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வ
ரையிலான கடற் பிரதேசத்தில் 50 மற்றும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேல்- சப்ரகமுவ- மத்திய மாகாணங்களிலும் குருநாகல்- புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யுமெனவும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளைஇ நேற்றும் மேல் மாகாணத்தில் சீரற்ற காலநிலையால் தொடர்ந்து காலை முதல் மழை தொடர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக மழை- வெள்ளம்- மின்னல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தத்தினால் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கிரிவுல்ல பகுதியில் பாடசாலையொன்றின் மீது மின்னல் தாக்கியதில் மாணவர்கள் 14 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் யக்கலமுல்ல என்ற இடத்தில் சிவப்பு மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.(எம்.ரி.-977)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீசிய மினி சூறாவளியினால் 41 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் தெனியாய பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890