சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியை மறித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாணவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான உரிமையை வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.