பிரசவ வலியை மறக்க இவர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்!!(வீடியோ)

523

Pirasavam

அமெரிக்காவின் பொஸ்டன் நகரைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்துக்காக சமீபத்தில் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மகப்பேறின்போது, உச்சகட்ட பிரசவ வலியின் வேதனையை மறக்க கட்டிலின்மீது ஐபேடை வைத்துவிட்டு தனக்கு பிடித்தமான பாட்டை கேட்டபடி, துள்ளி குதித்து நடனமாடி, 6 பவுண்ட் எடையில் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பொஸ்டன் நகரில் ஆசிரியராக பணியாற்றிவரும் யூகி நிஷிஸவா என்ற அந்தப் பெண்ணின் ‘பிரசவ நடனத்தை’ அருகாமையில் இருந்த அவரது கணவரான கான்னெல் கிளாய்ட் என்பவர் படமாக பிடித்து, இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.



1990களில் வெளியான ’டூட்ஸி ரோல்’ என்ற பாடலை அவர் இரசித்தபடி, ஒருபுறம் மகிழ்ச்சி ததும்பும் முகத்துடனும், இடையிடையே வலியின் வேதனையுடனும் அவர் ஆடும் நடனம் உண்மையிலேயே உணர்வுமயமான ஒரு கலவையாகவே காணப்படுகிறது.

அந்தப் பதிவினை பல்வேறு ஊடகங்களும் மறுபதிவு செய்ய மூன்றே நாட்களில் சுமார் ஒருகோடி பேர் இந்த நடனத்தை பார்த்துள்ளனர்.