ஆசஷ் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 566 ஓட்டங்களால் முன்னிலை..!

616

rootஇங்கிலாந்து– அவுஸ்திரேலியா மோதும்2–வது ஆசஷ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 128 ஓட்டங்களும் எடுத்தன. 233 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 எ ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

நேற்று 3–வதுநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதம் அடித்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்களை எடுத்து இருந்தது. ஜோரூட் 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பெல் 74 ஓட்டங்களையும் எடுத்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இங்கிலாந்து அணி 566 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. கைவசம் 5 விக்கெட் உள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் இருக்கிறது.