தடைகளை தகர்த்து வெளிவர தயார் நிலையில் கோச்சடையான்..!

407

kochadayanகொலிவுட்டில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் டிராப் ஆகிவிட்டது என்று சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ரஜினிகாந்தின் செயலாளர் படம் நிச்சயமாக வெளியாகும் என்று கூறியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கோச்சடையான் படத்தின் ட்ரைலர், ரஜினிக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் தான் இன்னும் வெளியிடவில்லை.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் இல்லை என்பதால் இந்தப் படத்தை கைவிட்டு விடும் முடிவுக்கு ரஜினிகாந்த் வந்து விட்டார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.



இதனால் கோச்சடையான் படம் டிராப் ஆகி விட்டது என்று ஊடகங்களிலும் வெளியானது.

இந்த செய்தி குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்தின் செயலாளர், கோச்சடையான் படம் நிச்சயம் வெளியாகும்.

தனது பகுதிக்கான டப்பிங்கை ரஜினிகாந்த் பேசி முடித்து விட்டார் என்றும் ரஜினிகாந்துக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் டப்பிங் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.