360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3D கமராக்களை வெளியிட்டது நொக்கியா!!

490

c33bcb39-e8ba-4118-9bf0-305e02a866f9_S_secvpf

ஒஸ்வோ (OZO) என்று பெயரிடப்படுள்ள மிகவும் சக்தி வாய்ந்த 360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3D கமராக்களை வெளியிட்டுள்ளது நொக்கியா.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இந்த புதிய கமரா வெளியிடப்பட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹான்செட்டுகளில் 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுக்களை பார்க்கும் வகையில் வடிவடைக்கப்பட்ட புதிய கோள வடிவ கமராவை வெளியிட்டுள்ளது நொக்கியா. இந்த புதிய நவீன காமரா 360 டிகிரியில் வீடியோ மற்றும் ஓடியோவை பதிவு செய்யும் திறன் வாய்ந்தது. இதில் 8 சென்சர்கள் மற்றும் மைக்குகள் உள்ளன. இதன் மொத்த எடை 2.7 கிலோ.

ஆனால், உலகிலேயே சக்திவாய்ந்த வி.ஆர்.( virtual reality ) கமராவாக இது கருதப்படுவதால் இந்த கமராக்கள் இந்த ஆண்டு கடைசியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.