மியன்மாரில் கனமழை. வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி – நிலச்சரிவால் 700 வீடுகள் சேதம்!!

609

RTR2GZ83-Pakistan

மியன்மாரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கும், கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் 1½ லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலச்சரிவால் சுமார் 700 வீடுகள் சேதமடைந்தன. இன்னும் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மியன்மாரில் ரகின் மாநிலம் முழுவதும் மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளை மீட்புக்குழுவினர் நெருங்க முடியவில்லை. எனவே இந்த மாநிலத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிகிறது.

கனமழையால் ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்கிறது. ஆற்று வெள்ளமும், மழை வெள்ளமும் சூழ்ந்துள்ளதால் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.



மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கான மீட்பு நடவடிக்கைகளை அங்குள்ள ராணுவ அரசு செய்து வருகிறது. எனினும் இது போதுமானதாக இல்லை என புகார்கள் எழுந்துள்ளன.