விலகுகிறார் செரீனா!!

414

serena-wins-againடென்னிஸ் உலகத் தர­வ­ரி­சையில் முதல் இடத்தில் இருக்கும் செரீனா வில்­லியம்ஸ், ஸ்டான்போர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து வில­கி­யுள்ளார். கடந்த முறை சம்­பியன் பட்டம் வென்ற செரீனா முழங்­கையில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த தொடரில் இருந்து வில­கி­யது குறித்து செரீனா கருத்து தெரி­விக்­கையில்,

‘‘ஸ்டான்போர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து வில­கு­வது மிகுந்த ஏமாற்றம் அளிக்­கி­றது. இருந்­தாலும்இ நான் என்­னு­டைய காயத்தில் இருந்து 100 சத­வீதம் குண­ம­டைய வேண்டும். என்­னு­டைய பிடித்­த­மான தொடரில் இதுவும் ஒன்று. இங்­குள்ள ரசி­கர்கள் எனக்கு எப்­பொ­ழுதும் மிகப்­பெ­ரிய ஆத­ர­வாக இருப்­பார்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதில் கலந்து கொள் ளும் வீரர்கள் வெற்றி பெற வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். அடுத்த வருடம் இந்த தொட ரில் விளை­யா­டுவேன் என்று நம்­பு­கிறேன்’’ என்று கூறி­யுள்ளார். இந்த மாத இறு­தியில் அமெ­ரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடை­பெற இருக்­கி­றது. இதற்கு இந்த தொடர் உத­வி­யாக இருக்கும் என்று செரீனா எண்­ணி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.