கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமா கின்றன. இம்முறை நாடளாவிய ரீதியில் பரீட்சையில் 3,09,069 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே உயர்தர பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில்.
இவ்வாண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகின்றது. இம்முறை நாடளாவிய ரீதியில் பரீட்சையில் 3,09,069 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.2,36,072 பாடசாலை பரீட்சாத்திகளும், 72,997 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பரீட்சை திகதியானது ஏற்கனவே பரீட்சைகள் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்த வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கிணங்க இம்மாதம் 17 ஆம் திகதி பொது தேர்தல் ஒன்ற நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் பரீட்சைகளுக்காக திட்டமிட்டிருந்த காலங்களில் மாற்றங்களை கொண்டுவந்தது.அதன் அடிபடையில் இன்று 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பரீட்சையானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறும். மீண்டும் இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் பரீட்சையானது 24ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும்.
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகளில் 22,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 2,180 பரீட்சை நிலையங்களும் 303 தொடர்பாடல் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.