மியன்மாரில் வெள்ளம் : 27 பேர் பலி!!

1007

Flooding in Northern Myanmar Leaves 9 Deadமியன்மாரில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அனர்த்தத்தினால் பாரிய அளவிலான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வெள்ளப் பெருக்கில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மியன்மாரில் 14 மாகாணங்களில் ஒரு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5 இலட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்ச் செய்கைகள் நீரில் முழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.