தாயின் அஜாக்கிரதையால் 4 வயது குழந்தையின் உயிரைப் பறித்த மசாலா பொடி!!

520

d858436b-d311-42c1-837c-8b9ed0e1807f_S_secvpfசமையலில் வாசனைக்காக உபயோகப்படுத்தும் மசாலாப்பொடியை தின்றதால் 4 வயது குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கெண்டுக்கி மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை மேத்யூ ராடர். எல்லாக் குழந்தைகளையும் போலவே துடுக்குத்தனமான மேத்யூ, வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது, சமையலறைக்குள் சென்று அங்கிருந்த அலுமாரியில் என்ன இருக்கிறது என்று தேட ஆரம்பித்தான். அப்போது, அங்கிருந்த லவங்கம் பட்டைத்தூளின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட அவன், லவங்க பேணியை திறந்து வாயில் போட்டுக் கொண்டுள்ளான். அதிகபட்ச காரத்தால் மேத்யூ அலறும் சத்தத்தைக் கேட்டு பதட்டத்துடன் ஓடி வந்த மேத்யூவின் தாயார் ப்ரியனா அவனை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஆனால், மேத்யூவை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்ட சோக செய்தியை ப்ரியன்னாவிடம் தெரிவித்தனர். மகனை இழந்த சோகத்தில் கதறி அழுத ப்ரியன்னா, உங்கள் குழந்தைகளை சமையலறையில் விளையாட விடாமல் பத்திரமாக் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தாய்மார்களிடம் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.