உடவலவைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மூவரும் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.