முன்னாள அமைச்சரின் வீட்டில் தீ!!

535

2080136875Fire

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமப்பின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பி. ரத்னாயக்கவிற்கு சொந்தமான மாதிவலை, சுபாதாராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மேல் மாடியில் தீ பிடித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீப்பரவல் எற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

இந்த தீப்பரவலினால் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கோட்டே தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டது.