ரயில்துறை வேலை நிறுத்தம் : இன்று நள்ளிரவு முதல்!!

486

sri-lanka-colombo-fort-railway-station-to-kandy-train

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று நள்ளிரவு வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தரப்படுத்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார்.

உயர் அதிகாரிகள், கட்டுப்பாட்டளார்கள், காவலாளிகள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.



இதனை தொடர்ந்து அனைத்து ரயில் சேவைகளும் தடைப்படும் எனவும் இன்று இரவுடன் தபால் ரயில் சேவை நிறுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு குறித்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என தரப்படுத்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.