அவுஸ்திரேலியா நௌறு தீவு அகதிகள் முகாமில் கலவரம்..!

814

aussiஅவுஸ்திரேலியா நௌறு தீவு அகதிகள் முகாமில் நேற்று இரவு பாரிய கலவர நிலை தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிசி செய்திசேவையின் தகவல்படி, பெரும்பாலான இலங்கையர்கள் உட்பட்டவர்கள், அங்கு கடமையில் இருந்த பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தநிலையில் 50 பேர் வரை நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் ஒரு செய்தியின்படி சுமார் 500 அகதிகள் தப்பிச் செல்வதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை அகதிகள் தமது கலவத்தை ஆரம்பித்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவர்கள் நௌறு அகதி முகாமின் மத்திய பகுதியை கைப்பற்றினர்.



இதன்போது அவர்கள் கத்தி, கம்பு உட்பட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த புதிய மருத்துவமனை உட்பட்ட கட்டிடங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

இந்த சம்பவத்தின்போது சுமார் 15 பொலிஸார் காயமடைந்தனர். முகாமில் உள்ள இரண்டு இலங்கையர்கள் நேற்று தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவங்களை அடுத்தே இந்த கலவரநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வருபவர்கள் நேரடியாக பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.