இயக்குனர் சீமானுக்கு பிடி வாரண்ட்!!

794

Seemaan

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.