சென்சாருக்காகக் காத்திருக்கும் தலைவா!

606

thalaivaவிஜய் இயக்கத்தில் விஜய் – அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தலைவா”. விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு அச்சாரமிடும் படம் என ரசிகர்கள் கருதுவதால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் “தலைவா” படத்துக்கு சென்சர் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியதாக கடந்த சில நாட்களாக புரளி கிளம்பியது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இப்போதுதான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது சென்சார் சான்றிதழ் எப்படிக் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் படக்குழுவினர்.

ஒகஸ்ட் 9ம் திகதி ரம்லான் தினத்திலோ அல்லது 15ம் திகதி சுதந்திர தினத்திலோ படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



அனேகமாக இந்த மாத இறுதியில் படம் சென்சாருக்கு அனுப்பப்படலாம். அப்போதுதான் அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள பாடல்களில் விஜய் பாடியுள்ள “வாங்கண்ணா வணக்கங்ண்ணா” பாடல் ஹிட்டாகி இருப்பதால், படமும் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.