கார் மோதி சிறுமி பலி – நகைச்சுவை நடிகர் கைது!!

541

balaமதுரை அருகே கார் மோதி, சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளம் நகைச்சுவை நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அருகே உள்ள பரவையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலா என்ற பாலசரவணன். “குட்டிப்புலி” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர் இப்போது “பண்ணாயாரும் பத்மினியும்” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் அழகர்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது செட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற உமாமகேஸ்வரி என்ற 4 வயது சிறுமி மீது கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து மேலவளவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.