19 வயதில் 2 வயதுக் குழந்தைபோல் காட்சியளிக்கும் விநோதப் பெண்!! (வீடியோ)

1114

பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம்பெண் Congenital Agenesis என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நோய் உள்ளவரது உடல் வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் இந்தப் பெண் ஓர் குழந்தை போல் வாழ்ந்து வருகின்றார். உடலைவிட தலைப் பகுதி அதிக எடை கொண்டிருப்பதால் இப்பெண்ணால் எழுந்து நிற்கவோ, உட்காரவோ இயலாது.

2.5 அடி உயரமும் 12.5 கிலோ எடையும் கொண்டுள்ள இப்பெண், தனது குடும்ப வறுமையைக் குறைக்கும் நோக்கில் ஓவியங்களை வரைந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றார். கிரிஜா இதுபற்றி கூறுகையில், என் தாயார் நான் உண்பதற்கும் மற்ற விடயங்களை செய்வதற்கும் உதவிகளை செய்கிறார்.



ஆனால் நான் வரையும் போதும், ஓவியத்துக்கு வண்ணங்கள் தீட்டும் போதும் நான் யாருடைய உதவியையும் நாடுவதில்லை. நானே அதனை செய்துவிடுவேன்.

நான் ஒரு மாதத்திற்கு 5 முதல் 6 ஓவியங்களை விற்பதன் மூலம் சுமார் 8000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன்.
மேலும், என் பெற்றோர்களை பொருளாதார ரீதியாக பார்த்து கொள்ள என்னால் முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிஜாவின் தாயார் கூறுகையில், நாங்கள் முதலில் எங்கள் மகளின் இந்த நிலையால் பெரும் துயரங்களை அனுபவித்தோம். இப்பொழுதும் கூட அவளை பார்த்துக் கொள்வது எங்களுக்கு கடினமாகவே உள்ளது. எங்கள் மனதில் வலி இருக்கவே செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

11 12 13