விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் எடுக்க காத்திருந்த பெண்ணைக் கற்பழித்து விட்டார் ஒரு நபர். இது லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் எடுக்க வருவோருக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்குள் வைத்து தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து போலீஸாருக்குப் போன் செய்து அவர் தன் மீதான தாக்குதல் குறித்துப் புகார் கொடுத்தார்.
விம்பிள்டன் போட்டியைக் காண வருவோருக்காக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் சார்பில் கூடாரங்கள் அமைக்கப்படும். டிக்கெட் எடுக்க வருவோர், தங்களை ஓய்வில் ஆழ்த்திக் கொள்வதற்காக இந்த கூடாரங்கள் அமைக்கப்படுகிறது. அதில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 30 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்து தற்போது ஜாமினில் விடுவித்துள்ளனர். சம்பநத்ப்பட்ட பெண் விம்பிள்டன் மைதானத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கியிருந்தார். அவருடன் குற்றம் சாட்டப்பட்ட நபரும் தங்கியுள்ளார். அப்போதுதான் கற்பழிப்பி்ல் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இருவரும் அதற்கு முன்பு அறிமுகமானவர்கள் இல்லையாம். இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். விசாரணை நீடிக்கிறது.