வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு !

619
12_04_07_sla_arms_vavuniya_web (1)
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை இன்று மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கற்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளவினுள் தென்னங்கன்று நடுவதற்காக குழி வெட்டியபோது, அக்குழியினுள் பரல் ஒன்று காணப்பட்டுள்ளது.

அங்கு மேலும் தோண்டியபோது அதற்குள் ஆயுதங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உடனடியாக சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கைப்பட்டதை அடுத்து பொலிஸார் அந்த பரலில் இருந்த வெடிபொருள்களை மீட்டனர்.

ஆர்.பி.ஜி.எறிகணைகள் – 2, பரா வெளிச்சக்குண்டுகள் – 2, எம்.பி.எம்.ஜி. ரவைகள் 67 என்பன உட்பட சில வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.



இப்பகுதியில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கருதி அப்பகுதியை அகழ்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.