மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியரக வானூர்தி மீட்பு! அருகில் நாமலின் வாகனமும் மீட்பு!

1230

D0650d

மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானமொன்று கொழும்பு 5இல் உள்ள பொருளாதார வலயத்தில் பொலிஸாரினால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இருந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சீ.எஸ்.என் நிறுவனத்தின் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே மேற்படி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இருவர் பயணிக்கலாம் எனவும் இந்த விமானத்தை இயக்குவதற்கு தேவையான பொருட்கள் அவ்விடத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.