மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படுகிறது. இதனால் கரையோர பிரதேசங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை ஆரம்பித்த இந்த காற்றுடன் கூடிய மழை இன்னும் தொடர்வதாக அங்கிருந்து வரும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்றினால் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கும் எமது மட்டக்களப்பு செய்தியாளர் சேதவிபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.