புற்றுநோய் பாதித்தவர், மனைவியை சுட்டு கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

286

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலராக பணி செய்து வந்தவர் குல்தீப் தியாகி (46). இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

திடீரென வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டு, இவரது 2 மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அம்மா, அப்பாவை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் ஏற்கனேவே இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரியாது. என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது.

என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு” என்று குல்தீப் எழுதியுள்ளார்.

வீட்டிலிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.