வவுனியாவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்!!

453

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வவுனியா ஊடகவியலாளர்களும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(09.04.2025) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை, பெண் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யும் முறை, பட்டியல் ஆசனம் வழங்கப்படும் முறை மற்றும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் இதன்போது பதில் வழங்கப்பட்டது.



குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் மற்றும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.அரவிந்தன், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.