கெஸ்பேவ, பட்டுவந்தர பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வயோதிப தம்பதி ஒன்று காயமடைந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் வசிக்கும் வயோதிப தம்பதி ஒன்றே காயமடைந்துள்ளனர்.
பண்டாரகமவிலிருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதே இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப தம்பதி ஒன்று காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.