மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

222

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடுமென திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் வீசக்கூடுமென தெரிவித்துள்ளது.